சுவையான புடலங்காய் ரிங் பஜ்ஜி செய்வது எப்படி?
நாம் அதிகமாக காய்கறிகளை வைத்து குழம்பு அல்லது கூட்டுகள் தான் செய்கிறோம். தற்போது இந்த பதிவில் புடலங்காயை வைத்து எவ்வாறு பஜ்ஜி செய்வது என்பது பற்றி பார்ப்போம்.
தேவையானவை
- பிஞ்சு புடலங்காய் – பாதி
- கடலை மாவு – அரை கப்
- பச்சரிசி – 2 மேசைக்கரண்டி
- பூண்டு – 5 பல்
- மிளகாய் – 5
- பெருங்காயம் – அரை தேக்கரண்டி
- சீரகம் – ஒரு தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் புடலங்காயை வட்டமாக நறுக்கிக் அதற்குள் இருக்கும் விதையை நீக்கி விட வேண்டும். பின் பச்சரிசியை களைந்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறியதும், தண்ணீரை வடித்துவிட்டு, அதனுடன் பூண்டு, சீரகம், பெருங்காயம், மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அரைத்த விழுதை கடலை மாவுடன் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். பின் வாணலியில் எண்ணெயை காய விட்டு, நறுக்கி வைத்துள்ள புடலங்காய் வளையங்களை பஜ்ஜி மாவில் தோய்த்தெடுத்து எண்ணெயில் போட்டு பொன் நிறமாக பொரித்தெடுக்க வேண்டும். இப்பொது சுவையான புடலங்காய் ரிங் பஜ்ஜி தயார்.