ஹாங்காங்கில் கொரோனா வைரஸால் உயிரிழந்த நாய்.!
ஹாங்காங் நகரைச் சேர்ந்த பெண் ஒருவருடைய பொமரேனியன் நாய் வேகமாக பரவிய வரும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டது. பின்னர் உடனடியாக அந்த நாயை தனிமைப்படுத்தி சிகிச்சை கொடுக்கப்பட்டது.இந்நிலையில் அந்த நாய் குணமடைந்தது என உறுதியான பிறகே கடந்த சனிக்கிழமை வீட்டுக்கு அனுப்பினர். இதையெடுத்து நேற்று முன்தினம் அந்த நாய் இறந்துள்ளது.
நாய் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் விரும்பினர். ஆனால் நாய் உரிமையாளர் பிரேத பரிசோதனைக்கு அனுமதிக்க விரும்பவில்லை என கூறப்படுகிறது.
வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் உலகம் முழுவதும் நேற்றுவரை 1,79111 பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 7426 இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.