பேரணி, பொதுக்கூட்டங்கள் ரத்து – பாஜக தலைவர் ஜே.பி. நட்டா அறிவிப்பு
பேரணி, பொதுக்கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக பாஜக தலைவர் ஜே.பி. நட்டா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக மத்திய ,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.இந்தியாவில் கொரோனாவால் 140-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டே வருகிறது .
இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அடுத்த ஒரு மாதத்திற்கு பாஜகவினர் பேரணி, பொதுக்கூட்டம் அல்லது போராட்டங்களை நடத்த வேண்டாம் என்று அக்கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா அறிவித்துள்ளார்.