தந்தை இறுதி சடங்கு முடிந்து 24 மணி நேரத்திற்குள் கடமையை செய்ய திரும்பிய அரசு அதிகாரி.!

Default Image

ஐ.ஏ.எஸ் அதிகாரியான நிகுஞ்சா தால், தற்போது ஒடிசாவின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை செயலாளராக பணியாற்றி வரும் இவர், தனது தந்தையை இழந்த 24 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் அவரது பணியைத் தொடங்கிய நிகழ்வு அனைவரின் பாராட்டுகளை பெற்றுள்ளது. 

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நிகுஞ்சா தால் 1993 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்து வந்தார். தற்போது இவர் ஒடிசாவின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை செயலாளராக பணியாற்றி வருகிறார். நிகுஞ்சா தாலின் தந்தை நேற்று முன்தினம் காலமானார். தந்தையின் இறுதி சடங்குங்கள் அனைத்தையும் முடித்துவிட்டு, தனது தனிப்பட்ட துன்பங்களை துடைத்துக்கொண்டு, 24 மணி நேரத்திற்குள் அவரது கடமையையாற்ற பணியில் சேர்ந்தார். ஐ.ஏ.எஸ் அதிகாரி நிகுஞ்சா தால் தன்னலமற்ற செயலால் அனைவராலும் பாராட்டப்பட்டார். பின்னர் மக்களுக்கு சேவை செய்வதற்கு இவர் ஒரு முன்மாதிரி என்று அனைவரும் புகழ்ந்து வருகின்றனர். 

உலக முழுவதும் 7,000க்கும் மேற்பட்ட உயிர்களை கொன்ற கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் பரவி, இதுவரை 147 பேருக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், 3 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 41 பேரும், கேரளாவில் 30 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய, மாநில அரசுகள் வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒடிசா மாநிலத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. இதானால் அங்கு தீவிர நடவடிக்கை எடுத்தும் வரும் நிலையில், தனது தந்தை இறந்த 24 மணி நேரத்திற்குள் மக்களுக்காக சேவை செய்ய வந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி மற்றும் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை செயலாளரான நிகுஞ்சா தாலுக்கு அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்