சுவையான அரிசி பருப்பு சாதம் செய்வது எப்படி?
நாம் நமது வீடுகளில் விதவிதமான சமையல்கலை செய்து சாப்பிடுவதுண்டு. சுவையான அரிசி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- சாப்பாட்டு அரிசி – ஒரு டம்ளர்
- துவரம் பருப்பு – ஒரு கைப்பிடி
- சின்ன வெங்காயம் – 100 கிராம்
- பூண்டு – 8 பல்
- உப்பு தேவையான அளவு
- கடுகு அரை தேக்கரண்டி
- சீரகம் கால் தேக்கரண்டி
- மஞ்சள் பொடி அரை தேக்கரண்டி
- பச்சை மிளகாய் 4
- கருவேப்பிலை
- தக்காளி ஒன்று
- எண்ணெய் தாளிக்க
- நெய் ஒரு தேக்கரண்டி
செய்முறை
முதலில் அரிசி பருப்பை 5 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து, வடித்து வைக்க வேண்டும். பின் தக்காளி, பச்சை மிளகாய் இரண்டையும் நறுக்கி வைக்க வேண்டும். வெங்காயம் பூண்டை உரித்து வைக்க வேண்டும்.
பின் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளிக்க வேண்டும். அதில் வெங்காயம் பூண்டு பச்சைமிளகாய் தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். பின் அரிசி பருப்பு சேர்த்து 3 நிமிடம் வறுக்க வேண்டும்.
அதன்பிறகு 3 டம்ளர் தண்ணீர் மஞ்சள் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவேண்டும். தண்ணீர் வற்றியதும் கலவையை குக்கரில் வைத்து மூன்று விசில் வந்ததும் இறக்கவும். இப்போது சுவையான அரிசி பருப்பு சாதம் தயார்.