மக்கள் கோரிக்கையை ஏற்று, 2 வழிச்சாலை, 4 வழிச்சாலையாக மாற்றம் – முதல்வர் பழனிசாமி

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் பொதுப்பணித்துறை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது மதுரை ரிங் ரோடு சாலையில் 3 சுங்கச்சாவடிகள் ஏன்? என்றும் சுங்கச்சாவடிகள் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த வாய்ப்பளிக்கிறது என சட்டப்பேரவையில் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மதுரை மக்கள் கோரிக்கையை ஏற்று, 2 வழிச்சாலை, 4 வழிச்சாலையாக மாற்றம் செய்யப்படும்போது
செலவு அதிகமாக இருப்பதால், குறைந்த இடைவெளியில் 3 இடங்களில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
GetOut கையெழுத்திட அழைத்த ஆதவ்., மறுத்த பிரசாந்த் கிஷோர்!
February 26, 2025