இணையத்தை கலக்கும் மாஸ்டர் பட விஜயின் ஐ.டி கார்டு!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா லீலா பேலஸில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிலையில், இப்படத்தில் தளபதி விஜய் அணிந்திருக்கும் ஐ.டி கார்டு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தில், தளபதி விஜய்க்கு ஜான் துரைராஜ் என பெயரிடப்பட்டுள்ளது இந்த ஐ.டி கார்டு மூலம் தெரியவந்துள்ளது.