கடைகள் மற்றும் மால்களை முன்னெச்சரிக்கையாக மூட உத்தரவு
கடைகள் மற்றும் மால்களை முன்னெச்சரிக்கையாக மூடஉத்தரவிடப்பட்டுள்ளது என்று வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தியாகராய நகரில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சென்னை தியாகராய நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி சார்பில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது.பொதுமக்கள் அதிகம் கூடும் கடைகள் மற்றும் மால்களை முன்னெச்சரிக்கையாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக எல்லைகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது என்று வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.