தான் வளர்க்கும் கோழிகள் 28 குஞ்சுகள் பொரித்துள்ளது – முதலமைச்சர் பழனிசாமி
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது. அப்போது கால்நடைத்துறை மானியக் கோரிக்கையில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் உதய சூரியன், இலவச கோழி வழங்கும் திட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கும் கோழிகள் குஞ்சு பொரிப்பது இல்லை என்றும் கோழிக் குஞ்சுகள் வளர்க்க வழங்கப்படும் கூண்டுகள் சிறியதாக உள்ளது என குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இலவச கோழி வளர்ப்புத் திட்டத்தில் ஒரு நபருக்கு 25 கோழிகள் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
அதில் 15 பெட்டை கோழிகளும், 10 சேவல்களும் வழங்கப்படுவதாக கூறினார். பின்னர் தனது வீட்டில் வளர்க்கப்படும் 2 கோழிகள் தலா 14 முட்டைகளை இட்டு 28 குஞ்சுகள் பொரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் கோழி வளர்ப்புத் திட்டத்தில் வழங்கப்படும் கோழிகள் அனைத்தும் நல்ல கோழிகள் என்றும் பயனாளிகள் பயன் அடைய வேண்டும் என்பதற்காகத்தான் கோழிக் குஞ்சுகள் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது எனவும் முதல்வர் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.