பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்.!
பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்தி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கு இந்திய ராணுவமும் அவ்வப்போது பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மன்கோட், மெந்ஹார் ஆகிய செக்டாரில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
இந்த அத்துமீறலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த தாக்குதல் மக்கள் மத்தியில் பீதி ஏற்படுத்தி உள்ளது.