புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு.!
புதுச்சேரியில் மார்ச் 31ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அரசியல் கட்சி ஊர்வலம், பொதுக்கூட்டங்கள் போன்றவைகளுக்கு மார்ச் 31ம் வரை நடத்த கூடாது எனது முதல்வர் உத்தரவு. மேலும் புதுச்சேரியில் உள்ள மால்கள், நீச்சல் குளம், திரையரங்குங்கள் என ஆகியவைகளை மூட புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
In #Puducherry , we are closing the educational institutions, cinema halls, mall as a precautionary measure for #coronavirus .
— V.Narayanasamy (@VNarayanasami) March 17, 2020
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் பரவி வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழக முழுவதும் கல்வி நிறுவனங்கள் மற்றும் சினிமா தியேட்டர்கள் போன்றவைகளை மூட முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து புதுச்சேரி முதல்வரும் தற்போது அறிவித்துள்ளார்.