கொரோனா வைரஸ்:மாஸ்க் அணிய வேண்டாம்..மைய சுகாதாரத்துறை அறிவிப்பு
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 114 ஆக அதிகரித்துள்ளது.இதனால் மத்திய ,மாநில அரசு கொரோனோ வைரஸை தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது ஒரு அறிவுறுத்தலை பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது. அதில் கொரோனா வைரஸ்க்காக அனைவரும் மாஸ்க் அணிய வேண்டிய அவசியமில்லை என்றும் மாறாக இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் இருப்பவர்கள் மட்டுமே மாஸ்க் அணிந்தால் போதுமானது.அவ்வாறு மாஸ்க் அணிந்திருக்கும்போது வெளிப்புறத்தை கைகளால் தொடக்கூடாது என்று தெரிவித்துள்ளது.