கொரோனா வைரஸ் : தமிழக முதல்வர் ட்விட்டரில் முக்கிய எச்சரிக்கை !

Default Image

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 114 ஆக அதிகரித்துள்ளது.இதனால் மத்திய ,மாநில அரசு கொரோனோ வைரஸை தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் அனைத்து கல்விநிறுவனங்கள் வருகின்ற 31-ம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் மட்டும் தொடர்ந்து இயங்கும் எனவும் மேலும் பத்தாம் வகுப்பு , +2 வகுப்பு தேர்வுகள் மற்றும் நுழைவு தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அனைத்து விளையாட்டு அரங்கங்கள், கிளப்புகள், டாஸ்மாக் பார்கள் மார்ச் 31-ம் தேதி மூடப்படும் என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

இந்த நிலையில்  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ட்விட்டரில் ஒரு எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது :

யாரேனும் #Coronavirus காய்ச்சல் பற்றி பொய்யான செய்தியோ, வதந்தியோ அல்லது தேவையற்ற பீதியை செய்தியாகவோ, சமூக வலைதளத்திலோ, வேறு எந்த வடிவிலோ பரப்பினால் இந்திய தண்டனை சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம், 2005 மற்றும் நடைமுறையில் உள்ள பிற சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வரின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .

தவறான செய்திகளை மற்றவர்களுக்கு பகிர்வதால் நம்மை சுற்றி இருப்பவர்கள் மட்டுமில்லாமல் நாமும் அதனால் பாதிப்படைய நேரிடும் .எனவே ஆதாரமற்ற தகவல்களை பகிரவேண்டாம் என்று மருத்துவர்கள் சமுக ஆர்வலர்களும்  கேட்டுக்கொண்டுள்ளனர் .

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்