வரலாற்றில் இன்று தான் மதுரை மாவட்டம் உருவானது…!!
மார்ச் 6,, 1790.- வரலாற்றில் இன்று. மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்டது – ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியாரின் நிர்வாகத்தில் பெரும்பான்மையான தமிழகம் இருந்தபோது அவர்கள்தான் நிர்வாக வசதிக்காக இதுபோல் மாவட்டங்களை உருவாக்கினார்கள். அவ்வாறே மதுரை மாவட்டமும் உருவாக்கப்பட்டது. இது தற்போது மதுரையை சுற்றியுள்ள திண்டுக்கல், தேனி, விருதுநகர்,ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது. தற்போதைய மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி தவிர, 5 நகராட்சிகள், 12 பேரூராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்கள், இந்த ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் 431 கிராம ஊராட்சிகள் உள்ளன