கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வு – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை.!

Default Image

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு உரிய இழப்பீடு மற்றும் மறுவாழ்வு வழங்கக் கோரி மீனவர் நலச் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாடு மீன்வளத்துறை இயக்குநர் சமீரன் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் இலங்கை, இந்திய மீனவர்கள் பிரச்னைக்கு கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாக இருக்கும் என்ற நிலைப்பாட்டில் தமிழக அரசு திடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

மேலும் 1,750 மீனவ குடும்பங்களுக்கு ஒரு கோடியே 77 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆழ்கடல் மீன்பிடி திட்டத்தை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் ரூ.286 கோடி விடுவித்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அறிக்கையை ஆய்வு செய்து பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும் இந்த திட்டங்களை அமல்படுத்துவதில் உள்ள முன்னேற்றங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை 6 வாரங்களுக்கு தள்ளி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்