#BREAKING : திமுக பொருளாளர் பதவியில் இருந்து துரைமுருகன் விலகல்

திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டியிட விரும்புகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவின் பொதுச்செயலாளராக 43 ஆண்டுகள் பதவி வகித்த பேராசிரியர் க.அன்பழகன் காலமானதையடுத்து, திமுகவின் பொதுச்செயலாளர் பதவி தற்போது காலியாக இருந்தது . கட்சியின் முக்கிய அறிவிப்புகள் அனைத்தும் பொதுச்செயலாளர் மூலமாகவே வெளிவரும்.இதற்கு இடையில் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய திமுக பொதுக்குழுக் கூட்டம் மார்ச் 29ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் , பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டியிட விரும்புகிறார் .இதனால் திமுக பொருளாளர் பதவியிலிருந்து விலகுகிறார் துரைமுருகன் .ஆகவே மார்ச் 29-ஆம் தேதியன்று பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்வு நடைபெறும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக பொருளாளர் பதவியில் இருந்து துரைமுருகன் விலகிய நிலையில்,பொதுச்செயலாளர் பதவியுடன் சேர்ந்து இந்த பதவிக்கும் புதிய நபர் தேர்வு செய்யப்படவுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025