மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவில் விஜயின் பேச்சு! இந்தியளவில் ட்ரெண்டான இந்த ஒரு வார்த்தை!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா நடித்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தொகுப்பாளர்கள், தளபதி விஜயிடம் சில கேள்விகளை கேட்டனர். அப்போது அவரிடம் உங்களுக்கு கோட் சூட் செமையா இருக்கு என்று சொல்ல, நண்பன் அஜித் மாதிரி போடலாம்னு நெனச்சேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து, இவர் நண்பன் அஜித் என்று கூறிய வார்த்தை தற்போது ட்ரெண்டாகி வருகிறது.