மலேசிய விமானத்தில் இளைஞரின் லீலை.!
கோலாலம்பூர்-டாக்கா சென்ற விமானத்தில் நிர்வாணமாக இருந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கடந்த சனிக்கிழமை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, வங்கதேச தலைநகர் டாக்காவிற்கு மலிண்டா விமானம் புறப்பட்டது. அதில் இருந்த இளைஞர் ஒருவர், விமானப் பெண் ஒருவரை கட்டிப் பிடிக்க முயன்றார். அவர் தடுத்ததால் அடிக்க முயன்றுள்ளார். இதுகுறித்து அப்பெண் சக பயணிகளிடம் புகார் அளித்துள்ளார்.
பின்னர் இருக்கைக்கு திரும்பிய இளைஞர், தனது ஆடைகளைக் களைந்தார். தொடர்ந்து லேப்டாப்பில் ஆபாசப் படத்தை போட்டு, சேட்டையில் ஈடுபட்டார். இதைக் கண்ட சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுதொடர்பாக விமான ஊழியர்களிடம் அளித்த புகாரின் பேரில், இளைஞரை உடைகள் அணியச் செய்தனர்.
இதையடுத்து அவரின் கைகளை துணியால் கட்டி, டாக்கா வந்ததும் போலீசில் ஒப்படைத்தனர். சம்பந்தப்பட்ட இளைஞர் மலேசிய பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார் என்று தெரியவந்துள்ளது.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் தகவல்களுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு