திமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார்?… கூடுகிறது திமுக பொதுக்குழு… தேர்வாகிறார் பொதுச்செயலாளர்…

Default Image

கடந்த மார்ச் 7ம் தேதி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலர் அன்பழகன் உடல் நலக்குறைவு மற்றும்  வயது முதிர்வு காரணமாக தனது 97ஆம் அகவையில்  காலமானார். தி.மு.க.வில் தலைவர் பதவிக்கு அடுத்ததாக திமுக பொதுச்செயலர் பதவி என்பது அதிகாரமிக்கது. எனவே இந்த பதவியை கைப்பற்ற தற்போதைய திமுக  பொருளாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர்கள் நேரு, பெரியசாமி, டி.ஆர்.பாலு, பொன்முடி, அ.ராஜா உள்ளிட்ட கட்சியின் மூத்த முன்னோடிகள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், புதிய பொதுச்செயலராக யாரை தேர்வு செய்யலாம் என்பது குறித்து தமிழகம் முமுழுவதும் கட்சியினரிடம் சர்வே எடுக்கும் பணியில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் குழுவினரும் ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை அறிவாலயத்தில் வரும் மார்ச் 29ம்தேதி திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பொதுச்செயலர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார். பொதுச்செயலராக யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதை கட்சி தலைமை முன்பே தீர்மானித்து அந்த நபரை பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் ‘ திமுக பொதுச்செயலர் தேர்வுக்காக தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வரும் மார்ச் 29ம் தேதி காலை 10:00 மணிக்கு சென்னை அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் என் தலைமையில் நடைபெறும். ‘பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்