பழனிசாமி கம்பெனியையும், தி.மு.க.வின் பித்தலாட்ட அரசியலையும் தோலுரித்துக் காட்டுவோம்-டிடிவி தினகரன் .!
அமமுக கட்சி மூன்றாம்ஆண்டு அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தொண்டர்களுக்கு ஓரு எழுதிய கடிதம் எழுதி உள்ளார்.
அதில் ,நம் தாயின் திருப்பெயரை இயக்கத்தில் கொண்டு அவரின் திருவுருவத்தை தாங்கிய கொடியை எனது ஆருயிர் நண்பன் மறைந்த மேலூர் ஆர்.சாமிக்கு சொந்தமான இடத்தில் ஏற்றிவைத்து மதுரை மேலூரில் மார்ச் 15, 2018- ல் இருந்த இயக்கம் எழுந்தது. பதிவு பெற்ற கட்சியாக ஒரு சின்னத்தில் வெற்றிச் சின்னத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போகிறோம்.
மூன்றாம் ஆண்டில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்!
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்களுக்கு மடல். pic.twitter.com/AkTGaeWlDQ— TTV Dhinakaran (@TTVDhinakaran) March 14, 2020
அதற்கு முன்னோட்டமாக குடியாத்தம், திருவெற்றியூர் தொகுதிக்கான இடைத் தேர்தல் எப்போது வந்தாலும் வாகை சூடும் வகையில் நம்முடைய பணிகள் அமையவிருக்கின்றன. அவற்றில் நாம் பெறுகிற வெற்றி சட்டமன்ற தேர்தலில் மக்கள் மனங்களை வென்று அம்மாவின் உண்மையான ஆட்சி மீண்டும் தமிழ்நாட்டில் உருவாக்குவதற்கு காட்டியங் கூறப்போகிறது
அம்மாவின் உண்மையான ஆட்சியைத் தமிழகத்தில் மீண்டும் உருவாக்க சபதமேற்று உழைப்போம்! – பொய் வேடம் போடும் பழனிசாமி கம்பெனியையும், தி.மு.க.வின் பித்தலாட்ட அரசியலையும்
மக்களிடம் தோலுரித்துக் காட்டுவோம்! pic.twitter.com/N0ApneBDvf— TTV Dhinakaran (@TTVDhinakaran) March 14, 2020
நம்முடைய லட்சிய பயணத்தில் ஏதேனும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில்தான் நம் சின்னம்மா பற்றி அக்கறையோடு பேசுவதைப் போல துரோக கூட்டம் நடிக்கிறது. சிஏஏ விவகாரத்தில் மத அடிப்படையில் மக்களை அணுகுவதை மத்திய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழகத்திற்கு தீங்கிழைக்கும் துரோகிகளை ஒருசேர வீழ்த்திடுவோம் என கூறியிருந்தார்.