அது வெறும் டெண்டர் படை..எங்கிட்ட இருப்பது தொண்டர் படை..அது இல்லேனா?? பழனிச்சாமிக்கு என்னாகும்!மக்களுக்கு தெரியும்!

அமமுகவில் இருப்பது தொண்டர் படை ; எடப்பாடி பழனிசாமியோடு இருப்பது வெறும் டெண்டர் படை என்று என்று தினகரன் கிண்டல் செய்து விமர்சித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் அமமுக இருக்குமா?? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இது குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைப் பற்றி அண்ணன் பழனிச்சாமி திருவாய் மலர்ந்திருக்கிறார். அமமுகவில் இருப்பது தொண்டர் படை! அம்மாவின் கட்சியை மீட்க போராடும் லட்சியப் படை! தேர்தல் அரசியலைத் தாண்டி இப்படை எப்போதும் களத்தில் நிற்கும்.
பழனிசாமியோடு இருப்பது வெறும் டெண்டர் படை! ஆட்சி அதிகாரம் இருக்கும் வரை மட்டுமே அது அவரோடு ஒட்டிக் கொண்டிருக்கும்! அதன்பிறகு என்னவாகும் என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்
— TTV Dhinakaran (@TTVDhinakaran) March 14, 2020
பழனிசாமியோடு இருப்பது வெறும் டெண்டர் படை! ஆட்சி அதிகாரம் இருக்கும் வரை மட்டுமே அது அவரோடு ஒட்டிக் கொண்டிருக்கும். அதன்பிறகு என்னவாகும் என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என்று விமர்சித்து தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024