தமிழக அரசு என்றும் மக்களுக்கான அரசு… தமிழக முதல்வர் பெருமிதம்…

திண்டுக்கல் மாவட்டம் அருகே ஒடுக்கத்தில் புதிதாக மருத்துவ கல்லுாரி அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் பங்கேற்க தமிழக முதல்வர் பழனிசாமி விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். பின் அவர், காரில் திண்டுக்கல் சென்றார். அப்போது மாவட்ட எல்லையான பள்ளபட்டி சிப்காட் அருகே அவரை அமைச்சர் சீனிவாசன், கலெக்டர் விஜயலட்சுமி, முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், மாவட்ட செயலாளர் மருத ராஜ், சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி, நிலக்கோட்டை ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் யாகப்பன்ஆகியோர் வரவேற்றனர். பின் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர், தமிழக அரசு இந்தியாவிலேயே கல்வி, மருத்துவத் துறையில் நலத்திட்டங்களை, வேறு எந்த மாநில அரசும் செய்யாத அளவுக்கு செய்துள்ளது. இதனால் கல்வியில் தமிழகம் விரைந்து வளர்ச்சி பெற்று வருகிறது. மாண்புமிகு ஜெயலலிதா காலத்தில் செய்த அனைத்து நலத்திட்டங்களும் தங்குதடையின்றி மக்களுக்கு சென்று சேர்கிறது. அதனால் தமிழக அரசு எப்போதும் மக்களின் அரசாக இருக்கும், என்றார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!
April 7, 2025
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025