கிராபிக்ஸ்-லாம் சர்வ சாதாரணம்..வயலில் ஸ்டாலின் குறித்த புகைப்படம்..!ஜெயக்குமார் விமர்சனம்

திமுக தலைவர் முக ஸ்டாலின் வயலில் நடந்து செல்வது போல் சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படம் பற்றிய கேள்விக்கு கிராபிக்ஸ் அதிகமாக செய்யலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்த அவர், ஜிஎஸ்டி 39-வது கூட்டம் டெல்லியில் நிதி அமைச்சர் தலைமையில் நடைபெற உள்ளது மாநில அரசின் சார்பில் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவிக்க இருக்கிறோம். இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் வயலில் நடந்து செல்வது போல சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் புகைப்படம் பற்றிய கேள்விக்கு கிராபிக்ஸ் அதிகமாக செய்யலாம் இந்த காலத்தில் அது எல்லாம் சர்வ சாதரனம் ஸ்டாலின் வயலில் எப்படி நடந்து போனார் என்று தெரியும் ரெட் கார்பெட்டில் ஷூ போட்டு நடந்து போன மனிதன் என்று ஸ்டாலினை விமர்சித்து பேசினார்.மேலும் பேசிய அவர் வெறும் காலால் நடந்து போனவர் முதல்வர் பழனிசாமி என்று கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வரலாறு காணாத உச்சம்! 71 -ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!
April 17, 2025
அமெரிக்கா விதித்த 245% வரி., சீனாவின் ரியாக்சன் என்ன?
April 17, 2025