முகக்கவசம் ,சானிடைசர்களை பதுக்கினால் 7 வருடம் சிறை..
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி 85 பேரை தாக்கி உள்ளது.கொரோனா வைரசால் 2 பேர் இறந்துள்ளனர். இதனால் மக்கள் பயத்தில் உள்ளனர்.மத்திய ,மாநில அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல மாநிலங்களில் மக்கள் கூடும் ஜிம் , திரையரங்கம் , போன்ற இடங்களில் மக்கள் கூட வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது.மேலும் பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறையும் விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தொடர்ந்து முக கவசம், கையை சுத்தப்படுத்தும் சானிடைசர்கள் ஆகியவற்றை அத்தியாவசியப் பொருளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் வரும் ஜூன் 30ம் தேதி வரை அத்தியாவசிய பொருள் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன் மூலம் முகக் கவசம் , சானிடைசர்களை பதுக்குவதோ அல்லது கள்ளச்சந்தையில் விற்பதோ சட்டப்படி குற்றமாகும். மீறினால் 7 வருடம் சிறை தண்டனை விதிக்கப்படும். முகக் கவசம் , சானிடைசர்கள் பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்கவே மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.