ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் கைது!
காவல்துறையினர் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரை கைது செய்தனர்.
காவல்துறைக்கு கோவில் அருகிலேயே நடைபெற்று வந்த இந்த சட்டவிரோத மதுவிற்பனை தொடர்பாக பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தன.
இதனையடுத்து அப்பகுதியில் தீவிர சோதனை நடத்திய காவல்துறையினர், சங்கு விற்பனைக் கடை ஒன்றில் இருந்து 144 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக கடையின் உரிமையாளர் அன்புராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அன்புராஜ் பாம்பன் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடையிலிருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.