டெஸ்லா ரோட்ஸ்டெர் கார் விண்வெளியில் கிருமிகளை ஏற்படுத்துமா?அறிவியலாளர்கள் எச்சரிக்கை….

Default Image

அறிவியலாளர்கள்  விண்வெளிக்கு அனுப்பப்பட்ட டெஸ்லா ரோட்ஸ்டெர் கார் பூமியிலிருந்து கிருமிகளை எடுத்துச் சென்று அங்கு உயிரி அச்சுறுத்தல் ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளனர்.

ஸ்பேஸ் எக்ஸ்-ன் ஃபால்கான் 9 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 6ம் தேதி  அதன் தலைமைச் செயலதிகாரி எலான் மஸ்க் விருப்பப்படி டெஸ்லா ரெட் ரோஸ்டர் கார் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. பொதுவாக நாசா விண்வெளிக்கு அனுப்பும் ராக்கெட் உள்பட அனைத்துப் பொருட்களும் விஞ்ஞானிகளால் கிருமிநீக்கம் செய்து அனுப்பும். ஆனால், தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் அனுப்பிய மனித பொம்மையுடன் கூடிய டெஸ்லா கார் வெறும் சுத்தம் செய்யப்பட்டு அனுப்பப்பட்டிருக்குமே தவிர, கிருமிநீக்கம் செய்யப்பட்டிருக்க வாய்ப்பிருக்காது என பர்ட்யூ (Purdue)பல்கலைக்கழக பேராசிரியரும், விண்வெளி ஆய்வக ஆராய்ச்சியாளருமான ஜே மெலோஸ் (Jay Melosh) தெரிவித்துள்ளார். செவ்வாய் கிரக சுற்றுப் பகுதியில் காற்றில் ஈரப்பதமின்மையால், துருப்பிடிக்க வாய்ப்பில்லை எனவும், ஆனால், பாக்டீரியா கிருமிகள் அந்த தட்பவெப்பத்தில் எதிர்வினை ஆற்றினால் பயோ த்ரெட் எனும் உயிரி- அச்சுறுத்தல் அங்கு ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்