தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்மாதிரியான மாநிலமாக உள்ளது – முதலமைச்சர் பழனிசாமி
தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்மாதிரியான மாநிலமாக உள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.325 கோடி மதிப்பில் அடியனூத்து கிராமத்தில் 8.61 ஹெக்டர் பரபரப்பளவில் புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அப்பொழுது அவர் பேசுகையில்,தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்மாதிரியான மாநிலமாக உள்ளது. ரூ.2,850 கோடி மதிப்பில் சுகாதார திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம் .தமிழகத்தில் கொரோனோ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பேசினார்.