டெங்கு காய்ச்சலும்! சித்த மருத்துவமும்!

Default Image

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றன. இந்நிலையில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது..

பொதுவாக மக்கள் தொகையில் ஒரு சதவீத பேருக்கு அன்றாடம் காய்ச்சல் ஏற்படுவது வழக்கமான ஒன்று ஆனால் மழைக் காலங்களில்  காய்ச்சலின் அளவு இரண்டு சதவீதமாக அதிகரிக்கிறது.இவ்வாறு வரும் காய்ச்சல் அனைத்தையும் டெங்கு காய்ச்சல் என கூறமுடியாது.டெங்கு காய்ச்சல் பொதுவாக கொசுக்களின் மூலமாகதான் பரவுகிறது. கடுமையான உடல் வலியும், உடலில் உள்ள இரத்த தட்டுக்களின் அளவு குறைவும் தான் இந்த காய்ச்சலின் அறிகுறிகளாகும்.டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்த காய்ச்சல் ரத்த தட்டு அணுக்கள் அழிப்பதால், ரத்த கசிவு ஏற்பட்டு இறப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.இந்த காய்ச்சலுக்கு ஆங்கில மருத்துவத்தில் எந்த ஒரு சிறப்பு மருந்தும் இல்லை.
சித்த மருத்துவத்தின், பப்பாளி இலை சாறு குடித்தால், ரத்த தட்டு அணுக்கள் அதிகரிக்கும், நிலவேம்பு குடிநீர் டெங்கு வைரசை அழித்து, காய்ச்சலை குணப்படுத்தும். மலைவேம்பு இலை சாறு டெங்கு வைரசை எதிர்க்கும் சக்தி கொண்டது. எனவே, இவைகள் மூலம் டெங்கு காய்ச்சலை ஒழிக்கலாம் என்பதில் சிறிதளவு சந்தேகமும் இல்லை..

காய்ச்சலுக்கு மருத்துவர்கள் அளிக்கும் ஆங்கில மருத்துவத்துடன், சித்த மருத்துவத்தில் தயாரிக்கப்படும் பப்பாளி இலை சாறு, மலைவேம்பு இலை சாறு, நிலவேம்பு குடிநீர் கசாயம் ஆகியவைகளை தயாரித்து பொதுமக்கள் தங்கள் வீட்டிலேயே தயாரித்து குடிக்கலாம். 

பப்பாளி இலை சாறு தயாரிக்கும் முறை :

புதிதாக பறித்த பப்பாளி இலைகளில் உள்ள காம்புகளை அகற்றிவிட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து வடிககட்டி 10 மில்லி வீதம் நாளொன்றுக்கு நான்கு முறை அருந்த வேணேடும். பப்பாளி இலைச் சாறு அருந்துவதால் ரத்த தட்டு அணுக்கள் அதிகரிக்கிறது. 
பப்பாளியின் இலையில் ஆன்டி-மலேரியல் மற்றும் ஆன்டி-கேன்சர் பொருட்கள் இருப்பதாகவும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இலையின் சாற்றை மலேரியா மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அருந்தி வந்தால் உடலில் உள்ள நோயை தடுக்கவும் முடிகிறது. பப்பாளி இலையில் வைட்டமின் ஏ, பி, ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பப்பாளி இலைச்சாறு வீட்டில் தயாரிக்கப்படும் பாரம்பரிய மருந்தாகும்.

மலைவேம்பு இலைச்சாறு தயாரிக்கும் முறை :


 புதிதாக பறித்த மலைவேம்பு இலைகளுடன் சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து அல்லது இடித்து வடிகட்டி 10 மில்லி வீதம் நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை அருந்த வேண்டும். மலைவேம்பு இலைச்சாறு டெங்கு வைரசை எதிர்க்கும் சக்தி கொண்டது.

நிலவேம்புக் குடிநீர் தயாரிக்கும் முறை : 


நிலவேம்பு, சுக்கு, மிளகு, பற்படாகம், விலாமிச்சை, சந்தனம், பேய்புடல், கோரைக்கிழங்கு, வெட்டிவேர் ஆகியவைகளை தேவையான அளவு தண்ணீர் இட்டு கொதிக்க வைத்து வடிகட்டி 50 மில்லி வீதம் நாளொன்றுக்கு இருவேளை அருந்த வேண்டும். 

மேற்கண்ட சாறுகளையும் குடிநீரையும் ஐந்து நாட்கள் அருந்தி வர காய்ச்சல் தணிந்துவிடும். காய்ச்சல் தணிந்த பிறகும் மேலும் இரண்டு நாட்களுக்கு அருந்தி டெங்கு காய்ச்சலை ஓடஓட விரட்டலாம்.

Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்