#BREAKING : அச்சுறுத்தும் கொரோனா -பத்ம விருதுகள் வழங்கும் விழா ஒத்திவைப்பு!
கொரானா வைரஸ் காரணமாக பத்ம விருதுகள் வழங்கும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக மத்திய அரசு,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிரிக்கெட் போட்டிகள்,கால்பந்து போட்டிகள் உள்ளிட்ட பல போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கொரானா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பத்ம விருதுகள் வழங்கும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.