குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்!
பெற்றோர்கள் கருவுற்ற நாளில் இருந்து, அந்த குழந்தையை கையில் பெற்றேடுக்கும் நாள் வரைக்கும், தங்களது குழந்தைகளுக்காகவே உணவு உனபாதை வழக்கமாக கொண்டிருப்பர். அந்த வகையில் தற்போது இந்த பதிவில், கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சி அதிகரிக்க என்ன உணவுகளை உண்ண வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
தாயின் 4-வது மாதத்தில் இருந்து, குழந்தையின் மூளையானது முழுமையாக வளர்ச்சியடைந்து விடுகிறது. அவர்களுக்கு உணரக் கூடிய தன்மையும் உருவாக்கி விடுகிறது.
இரும்புசத்து
குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு இரும்புசத்து நிறைந்த உணவுகளை உண்பது மிகவும் அவசியம். பசலை கீரை, பச்சை பட்டாணி போன்ற உணவுகளில் அதிகப்படியான இரும்புசத்து உள்ளது. இந்த உணவுகள் குழந்தையின் மூளைக்கு தேவையான ஆக்சிஜனை எடுத்து செல்கிறது.
புரதம்
குழந்தைக்கு புரதம் நிறைந்த உணவுகள் சாப்பிடுவது நல்லது. அந்த வகையில், புரத சத்து நிறைந்த உணவுகளான பீன்ஸ், மீன், முட்டை மற்றும் இறைச்சி போன்ற உணவுகளை விரும்பி உன்ன வேண்டும். இது குழந்தையின் செல்களை உருவாக்குகிறது.
ஒமேகா 3
ஒமேகா 3 நிறைந்த உணவுகள் குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. வால்நட் மற்றும் பருப்பு வகை உணவுகளை விரும்பி சாப்பிடுவது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.