நடிகர் தனுஷுடன் மோதும் விஷால்!
நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சக்ரா. இப்படத்தை இயக்குனர் ஆனந்தன் அவர்கள் இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் விஷால் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் துவங்கியுள்ள நிலையில், இப்படம் மே 1-ம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ஜகமே தந்திரம் என்ற படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார். இந்த படமும் மே 1-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ஒரேநாளில் விஷால் மற்றும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் மோதவுள்ளது.