மாவோயிஸ்ட் ஸ்ரீமதியை போலீஸ் காவலில் விசாரிக்க மனு தாக்கல்..

கடந்த அக்டோபர் மாதம் கேரளா அட்டப்பாடி அருகே மஞ்சக்கண்டி வனத்தில் தண்டர்போல்டு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகளுக்கும் , போலீசாருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
இந்த துப்பாக்கி சூட்டில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த கும்பலில் இருந்து சோனா ,தீபக் மற்றும் ஸ்ரீமதி தப்பியோடி விட்டனர்.கடந்த நவம்பர் 9-ம் தேதி பில்லூர் வனப்பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட் தீபக் என்பவரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய ஸ்ரீமதி, சோனாவை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் மாவோயிஸ்ட் ஸ்ரீமதி நேற்று முன்தினம் ஆனைகட்டியில் இருந்து பேருந்து மூலம் கோவை வருவதாக  போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வாகன சோதனை நடத்தி போலீசார் பேருந்தில் இருந்த ஸ்ரீமதியை கைது செய்தனர்.

பின்னர் கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையெடுத்து ஸ்ரீமதியை வரும் 26-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டார்.

கோவை மாவட்ட கியூ பிரிவு போலீசார் ஸ்ரீமதியை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

author avatar
murugan