புதுச்சேரியில் மார்ச் 8-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: காவிரி பிரச்சனையா??
மார்ச் 8-ம் தேதி புதுச்சேரியில் அந்த யூனியன் பிரதேசத்தின் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பாக , காவிரி ஆற்றை உரிமை கொண்டாட எந்த மாநிலத்திற்கும் உரிமையில்லை என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம், தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி நீர் தர உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடகத்துக்கு 280.75 டி.எம்.சி. நீர் வழங்க உத்தரவு. மேலும் 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தாக வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இந்த நிலையில் 4 மாநிலங்களின் தலைமை செயலாளர்கள், துறை செயலாளர்களை வைத்து, காவிரி தீர்ப்பு குறித்து, டெல்லியில் வரும் 9-ம் தேதி கூட்டம் கூட்டப்பட உள்ளது.
தற்போது புதுச்சேரியில் மார்ச் 8-ம் தேதி, காவிரி பிரச்சனை தொடர்பாக ஆலோசிக்க அனைத்துக்கட்சி கூட்டம் நடக்க இருக்கிறது. அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் நாராயணசாமி அழைப்பு விடுத்து இருக்கிறார்.
மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு.