இன்று நடைபெறுகிறது ஜிஎஸ்டி கூட்டத்தின் 39வது கூட்டம்… பல்வேறு பொருள்களுக்கு வரியை அதிகரிக்க முடிவு என தகவல்..
இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், கொரோனா அச்சத்தால் இந்தியாவில் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 39-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில், அரசின் வரி வருவாயை பெருக்கும் நோக்கில் சில பொருட்கள் மீதான வரியை உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஸ்மார்ட்போன்கள், ஜவுளி, காலணி, உரம், சூரியசக்தி உபகரணங்களுக்கான வரி உயர்த்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஸ்மார்ட்போன்களுக்கு 12 சதகிகித வரி விதிக்கப்படும் நிலையில், அதன் உதிரிபாகங்களுக்கு 18 சதவிகித வரி வசூலிக்கப்படுகிறது. எனவே இந்த முரண்பாடுகளை களையும் வகையில், ஸ்மார்ட்போன்களுக்கான வரியை 18 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இதுபோன்ற மாறுபாடுகளை மாற்றியமைத்து ஒரே வரி வரம்பிற்குள் கொண்டு வரக்கூடும் என தெரிகிறது.