இது தான் பெஸ்ட்…அது வேண்டாம்..குலுக்குவதை விடுத்து கரம் கூப்பும் சர்வதேசம்!
கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பரஸ்பரமாக கைக்குலுக்கி வந்த பன்னாட்டுத் தலைவர்கள் எல்லாம் தற்போது இந்திய முறைப்படி இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றனர்.
ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றது என்றால் அது கைக்குலுக்கியும் ,கன்னங்களை ஒருவருக்கொருவர் உரசி முத்தமிடுட்டு பிறநாட்டு தலைவர்களை வரவேற்பது வழக்கம் ஆனால் கொரோனா வைரஸ் 90% கை மூலமாக பரவுகிறது என்று ஆய்வறிக்கைகள் கூறிவந்த நிலையில் தற்போது இவர்கள் எல்லாம் .தங்களது வழக்கத்தை மாற்றி இந்திய முறைப்படியே இருகரம் கூப்பி வரவேற்கின்றனர்.
அதே போல சீனாவில் இரு முழங்கைகளை இடித்து கொள்வதும்,கால்களால் ஒருவருக்கொருவர் தட்டி கொள்வதையே வணக்கம் என்று வழக்கமாக கொண்டவர்களும் தற்போது இந்திய முறைப்படியே வணக்கம் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ,அயர்லாந்து பிரதமர் லியோ வர்த்தகரை வரவேற்கும் போது கைக்குலுக்கும் வழக்கத்தை தவிர்த்து வணக்கம் கூறி வரவேற்றார்.அதே போல் பிரிட்டிஸ் இளவரசர் சார்லஸ் ஒரு முக்கிய பிரமுகரை வரவேற்கும் கைக்குலுக்க முனைந்தார் திடீரென கைக்குலுக்குவதை விடுத்து கரம் கூப்பி கும்மிட்டு வரவேற்றார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்ஜமின் நேதன்யாகு கரம் கூப்பி வரவேற்கவும், வணக்கம் தெரிவிக்கவும் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.இதேபோல் பிரஞ்சு அதிபர் இமானுவேல் மேக்ரான் ஸ்பெயின் மன்னர் பிலிப்பை வரவேற்கும் போது கும்பிட்டு வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உலகத்தலைவர்கள் இன்று செய்வதை என்றோ எம்முன்னோர்கள் எங்களுக்கு கற்று கொடுத்து சென்றனர் என்று இங்குள்ளோர் கர்வம் கொள்கின்றனர்