இன்றைய(14.03.2020)நாள் எப்படி இருக்கு!?ராசிபலன்கள் இதோ!!

Default Image

இன்றைய பலன்கள் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.

மேஷம்: தெளிவு பிறக்கும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும், பிரச்சணைகள் மறையும்.
 
ரிஷபம்: புதிய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.விலகிச் சென்றவர்கள் உங்கள் உதவியை நாடி வருவர். எதிரிகள் விலகுவர். சமர்த்தியத்தால் எதையும் வென்று விடுவீர்கள்.
 
மிதுனம்:  திட்டமிட்டவாறே காரியங்களை முடித்து மகிழ்ச்சி காண்பீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். போட்டிகள் அகலும். வரவு திருப்தி தரும்.
 
கடகம்: குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வீர்கள் உத்தியோகத்தில் பொறுப்புகள் சற்று கூடும் ஆலய வழிபாடு ஆனந்தத்தை தரும்.தடைப்பட்ட காரியங்கள் முழுவீச்சில் நடைபெறும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
 
சிம்மம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பணவரவு திருப்தி தரும். பிள்ளைகளால் வருமானங்கள் வந்து சேரும்.பழைய பாக்கிகள் வசூலாகும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.அரோக்கியம் சீராகும்.
 
கன்னி:  திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டவாறே நடைபெறும் நாள் நண்பர்கள் வழியாக நல்ல தகவல் வந்து சேரும்.நோய் அகலும். ஆரோக்கியம் சீராகும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த வில்லங்கங்கள் அகலும்.இன்று அனைவரின் பாராட்டு கிடைக்கும்.
 

துலாம்:  புதிய முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.கொடுக்கல்-  வாங்கல்கள்  ஒழுங்காகும்.பிரச்சினைகள் அகலும். அரசு வழியில் ஆதாயம் உண்டு. ஊர்மாற்றம்,இடமாற்ற சிந்தனை மேலோங்கும். 

விருச்சிகம்: குடும்பத்தினரிடம் அதிக நேரம் செலவீடுவீர்கள்.நெகிழ்ச்சியான தருணங்களை சந்திப்பீர்கள் மற்றவர்களை பற்றி அறிந்து கொள்வீர்கள்.எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்க பாடுபடுவீர்கள். வரவு திருப்தி தரும் நாள். அரசியல் வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். 

தனுசு:  ஆலய வழிபாட்டால் அமைதி குடிக்கொள்ளும் புதிய செய்லகளை செய்து வெற்றி காண்பீர்கள். அரசியல்வாதிகளால் ஆதாயம் கிடைக்கும். பொருளாதார நிலையை உயரும்.

மகரம்: திட்டமிட்ட காரியத்தை கச்சிதமாக முடித்து பாராட்டை பெறுவீர்கள்.இலக்கை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.வெற்றி பெற வேண்டும் என்ற  எண்ணம் மேலோங்கும்.விடமுயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும்.சகோதர வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்காமல் போகலாம்.

கும்பம்:  மனம் அனைத்தும் இருந்தும் திருப்தி இல்லாது போன்ற இருக்கும்.ஆலய வழிபாடு சற்று நிம்மதி தரும்.குழப்பம் தீர குகனை நினைத்து வழிபட வேண்டும் காலை நேரத்தில் கலகலப்பாக இருப்பீர்கள்.மனதிற்கு இனிய சம்பவம் நடைபெறும்.பேச்சை சுறுக்கி செயலில் இறங்குவீர்கள்.

மீனம்: மனதிற்கு மகிழ்ச்சி  தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். தனவரவு திருப்திகரமாக இருக்கும். பயணகள்  மேற்கொள்வீர்கள்.இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடை பெறும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
BJP State President Annamalai Arrest
Parliament session incidents
PM Modi jaipur Accident
Vidaamuyarchi From Pongal 2025
Spain Andaluz Viilage Street view
actor soori