எம்.பி வசந்தகுமார், பிரதமரை சந்தித்து கோரிக்கை.!
டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அந்த கோரிக்கையில், ஈரானில் சிக்கித் தவிக்கும் கன்னியாகுமரி மீனவர்களை ராணுவ விமானம் மூலம் உடனடியாக மீட்டு இந்தியா கொண்டுவர வேண்டுமென கோரிக்கையை வைத்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடியை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து பேசிய வசந்தகுமாரிடம், தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.