தமிழக டாஸ்மாக் கடை மூலம் இத்தனை ஆயிரம் கோடி வருமானமா.?
தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் மதுபான விற்பனை மூலம் ரூ.28,839 கோடி வருவாய் வந்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மதுவிலக்கு கொள்கை விளக்கக் குறிப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், 2019-20 நிதியாண்டில் வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பீர் ஏற்றுமதி செய்யப்பட்டதன் மூலம் 3 கோடியே 39 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றம் இல்லை எனவும் உச்சநீதிமன்றம் கூறியதால் தான் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மூடப்பட்ட கடைகளுக்கு, மாற்று ஏற்பாடாக வேறு இடத்தில் மீண்டும் திறக்கப்பட்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் டாஸ்மாக் மதுபாட்டிலில் இடம்பெற்று இருந்த, மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு என்ற வார்த்தை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை கொள்கை விளக்கக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.