#BREAKING : இனி மதுபோதையில் வாகனம் ஓட்டினால் கைது,லைசென்சும் ரத்து -நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் கைது செய்யலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு கூடுதலாக இழப்பீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது .இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் கைது செய்யலாம் என உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவரின் லைசென்ஸை (ஓட்டுனர் உரிமம் ) ரத்து செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.இதையெடுத்து மதுபோதையில் வாகனம் ஓட்டுவதை கண்காணிக்க தனிப்பிரிவு அமைக்கவும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.