சத்தான உளுந்து சோறு செய்வது எப்படி?
நாம் தினமும் ஏதாவது ஒரு விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சத்தான உளுந்து சோறு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- உளுந்து – 300 கிராம்
- அரிசி – ஒரு கிலோ
- வெந்தயம் – அரை மேசைக்கரண்டி
- சீரகம் – ஒரு மேசைக்கரண்டி
- பூண்டு – 3
- தேங்காய் – ஒரு மூடி
- உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் மேற்கூறிய அணைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் தேங்காயை துருவி வைத்துக் கொண்டு, பூண்டை தோல் உரித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் வாணலியில், உளுந்தை போட்டு, 5 நிமிடம் வருது எடுத்து கொள்ள வேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தில், இரண்டரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். தண்ணீரின் அளவு அரிசி உளுந்து இரண்டும் வேகும் அளவிற்கு இருக்க வேண்டும். பின் அதில் அரிசியை களைந்து போட்டு, வறுத்த உளுந்தையும் சேர்க்க வேண்டும்.
பின் சீரகம், வெந்தயம், பூண்டு போட்டு வேக விட வேண்டும். பின் சாதம் முக்கால் பதம் வெந்ததும் உப்பு போட்டு நன்கு கிளறி விட வேண்டும். சாதம், உளுந்து இரண்டும் வெந்ததும் தேங்காய் துருவல் போட்டு நன்கு கிளறி வேண்டும். பின் வெந்ததும் இறக்கி விட வேண்டும். இப்பொது சுவையான உளுந்து சாதம் தயார்.