உலக நாடுகளுக்கு புதிய நற்செய்தி… பிளாஸ்டிக்கை மட்க செய்யும் பூச்சிகள் கண்டுபிடிப்பு…

Default Image

கனடாவிலுள்ள, பிராண்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், தேனீ வளர்ப்போருக்கு சவாலாக இருக்கும் மெழுகுப் புழுக்கள் குறித்து  ஆராய்ந்தபோது ஒரு புதிய அற்புதம் தெரியவந்தது. மெழுகுப் புழுக்களின் வயிற்றிலுள்ள சில கிருமிகள் பிளாஸ்டிக்கை எளிதில் செறித்து, ஆல்கஹாலாக மாற்றித்தரும் திறனைக் கொண்டிருந்தன.
எனவே, இந்த கிருமிகளை தனியே எடுத்து ஆராய்ந்தனர். ஆனால், புழுக்களின் வயிற்றில் இருக்கும்போது அக் கிருமிகள் பிளாஸ்டிக்கை சிதைத்த   வேகத்தைவிட, தனியே ஆய்வகத்தில் செறிமானம் செய்த வேகம் குறைவாக இருந்தது. இதனால், புழுக்களின் வயிற்றில் அக் கிருமிகளுக்கு பிளாஸ்டிக்கை வேகமாக செறிமானம் செய்ய ஊக்கம் கிடைப்பதால், மெழுகுப் புழுக்களையே பயன்படுத்திப் பார்த்தனர்.
புழுக்களுக்கும், ஆய்வகத்தில் பிளாஸ்டிக்கை கொடுத்து, பெருமளவில் பிளாஸ்டிக் குப்பையை ஆல்கஹாலாக மாற்ற முடியும் என, பிராண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். எனவே, ஆய்வுகள் தொடர்கின்றன. இந்த  செய்தி உலக அளவில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் பெருகி வரும் பிளாஸ்டிக் பொருளை என்ன செய்வது என தெரியாமல் விழிபிதுங்கி வரும் நிலையில் இந்த கண்டுபிடிப்பு வருங்கால மணிதர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்