நானும் ரவுடி தான் பட நடிகரை மருத்துவமனையில் சந்தித்து உதவி செய்த மக்கள் செல்வன்!

Default Image

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் நானும் ரவுடி தான். இந்த திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.

இந்த படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான்  லோகேஷ் பாபு. இவர் ஆதித்யா தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த நிலையில், இவருக்கு சில நாட்களுக்கு முன்பதாக திடீரென்று ஸ்டோக் ஏற்பட்டுள்ளது. இதனால் இவரது இடது கால், இடது கை செயலிழந்து விட்டதாக கூறப்படுகின்றது.

இதனை அடுத்து அவரது நண்பர்கள் லோகேஷ்க்கு மருத்துவமனை செலவிற்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி லோகேஷ் பாபுவை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து மருத்துவ செலவையும் வழங்கியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்