ஆஸ்கார் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகருக்கும் கொரோனா!
கடந்த சில மாதங்களாகவே கொரோனா வைரஸ் பாதிப்பு அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. முதலில் சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் பாதிப்பு, பல உயிர்களை காவு வாங்கிய நிலையில், மற்ற நாடுகளுக்கும் இந்த நோய் பரவியுள்ளது.
இந்நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகரான டாம் ஹங்ஸ் மற்றும் அவரது மனைவியான ரீட்டாவும், படப்பிடிப்புக்காக ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு உடல் சோர்வு, சளி, இருமல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டதையடுத்து, மருத்துவரை அணுகி பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
மருத்துவ பரிசோதனையில், இவர்கள் இருவருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இவர்கள் இருவரும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.