#Breaking: இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவு.!
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 480 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 9,977ல் வணிகமாகிறது. மும்பை பங்குச் சந்தையின் சென்செஸ் 1,590 புள்ளிகள் சரிந்து, 34,106ல் வர்த்தகமாகிறது. கொரோனா வைரஸ் உலக தொற்று நோய் என்று உலக சுகாதாரத்துறை அறிவித்த நிலையில், பங்குச் சந்தைகள் கடும் சரிவுடன் வர்த்தகமாகின. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பங்குச் சந்தைகள் தொடர் சரிவை கண்டுள்ளது.