கண்கொள்ளாகாட்சி….அனந்தசயனகோலத்தில் அன்னை!வெகுச்சிறப்பு மாசிதிருவிழா
திண்டுக்கல் மாவட்டத்திலே மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக திகழ்வது திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் இக்கோவிலில் மாசிதிருவிழா வெகுச்சிறப்பாக நடைபெறும் அவ்வாறு நடப்பாண்டிற்கான மாசித்திருவிழா கடந்த மாதம் 20ந் தேதி பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்கி கொடியேற்றம், பூக்குழி இறங்குதல், தசாவதாரம், ஊஞ்சல் உற்சவம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
அம்மனின் தெப்ப உற்சவம் நடந்தது. இதனால் காலை 10.30 மணியளவில் அன்னைக்கு பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் உள்ளம் குளிரும் படியாக மகா அபிஷேகம் நடைபெற்று பகல் 12 மணியளவில் சிறப்பு அலங்காத்துடன் அன்னைக்கு தீபாராதனை நடந்தது. பின் மாலை 6 மணியளவில் தெப்ப உற்சவம் நடந்தது.இந்நிலையில் கோவில் கருவறை முன் 8 அடி நீளம், 8 அடி அகலம், 1½ அடி ஆழத்தில் புதிய தெப்பம் உருவாக்கப்பட்டது.
அந்த தெப்பத்தில் தாமரை, மல்லிகை, மரிக்கொழுந்து என பலவகை மலர்கள் மிதக்க அதில் அனந்தசயன கோலத்தில் அன்னை (கோட்டை மாரியம்மன்) இருப்பதை போன்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அன்னையின் அனந்தசயன கோலமானது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.பக்தர்கள் இவ்விழாவில் பெரும்திரளாக கலந்து கொண்டனர்.