ஆசை ஆசையாய் வளர்த்த எலுமிச்சை செடியை யானைகள் நாசம் செய்துவிட்டன …சட்டப்பேரவையில் துரைமுருகன்…
தமிழக சட்டப்பேரவையில் நேற்று சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மீதான விவாதம் நடைபெற்றது.அப்போது எதிர்கட்சித்துணை தலைவர் துரைமுருகன் காடுகளை விட்டு யானைகள் அதிகளவில் வெளியேறி விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.
காட்பாடியிலுள்ள தனது தோட்டத்தில் மூன்று ஆண்டுகளாக ஆசை ஆசையாய் வளர்த்த எலுமிச்சை செடிகளை யானைகள் துவம்சம் செய்ததாகவும் கூறினார்.இதற்கு பதிலளித்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் தோட்டம் வளமாக இருப்பதால் ருசியறிந்து யானைகள் அவரது தோட்டத்தை தேடி வருகிறது.
யானைகள் விரும்பும் உணவை பயிர் செய்யாதீர்கள் என யோசனை கூறினார். விவசாய நிலங்களை யானைகள் சேதப்படுத்துவதை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.