மீண்டும் இன்று மாவட்ட செயலாளர்களை சந்திக்கிறார் ரஜினி.!

ரஜினிகாந்த், மீண்டும் இன்று மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில், இன்று காலை இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்ட செயலாளர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார்.இதன் பின்னர் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,கட்சி தொடங்குவது பற்றி ஓராண்டுக்கு பிறகு மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினேன்.கட்சி தொடங்குவது பற்றி ஆலோசித்தோம்.ஆனால் ஆலோசனையில் ஒரு விஷயத்தில் மட்டும் எனக்கு ஏமாற்றம் உள்ளது. அதுபற்றி பின்னர் தெரிவிக்கிறேன்.இதுகுறித்து இன்று நடைபெற உள்ள ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் எனவும் தகவல் கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024