இன்று தென் ஆப்பிரிக்கா அணியுடன் முதல் ஒருநாள் போட்டி ! வெற்றியுடன் தொடங்குமா இந்தியா ?
தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி இன்று தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல் பிரதேஷ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் விளையாடுவதற்காக குயின்டான் டி காக் தலைமையில் தென்ஆப்பிரிக்க அணி இந்தியா வந்துள்ளது.இந்திய அணி வீரர்கள் தொடரை வெற்றியுடன் தொடங்குவதற்கு தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணி வீரர்களின் விவரம்:விராட் கோலி (கேப்டன்),ஷிகர் தவான்,பிரிதிவி ஷா,ராகுல்,மனீஷ் பாண்டே ,ஸ்ரேயாஸ் அய்யர் ,பண்ட்,ஹர்டிக் பாண்டியா,ஜடேஜா,புவனேஷ்வர் குமார்,சாகல்,பும்ரா ,சைனி,குல்தீப், கில் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.