பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி
இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் அன்பரசன், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் இருப்பதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு குறைந்துள்ளது என்றும் சுமார் 1500 டன் அளவிற்கு பிளாஸ்டிக் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்த விவாதத்தின் போது, குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி , தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை 100 சதவீதம் ஒழிப்பதற்கு, வியாபாரிகளும், பொதுமக்களும் முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். பின்னர் அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அவற்றை பயன்படுத்துவோர் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.