பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சரையும் தாக்கிய கொரோனா வைரஸ்..
பிரிட்டனில் சில தினங்களுக்கு முன்பு பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் மகளிர் தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் நாடின் டோரிஸ் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.
இந்த விழாவில் கலந்துகொண்ட பின்னர் பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் நாடின் டோரிஸ்க்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
நாடின் டோரிஸ்க்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட பிறகு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும், வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து பரவிய “கோவிட் 19” எனப்படும் கொரோனா வைரஸ் உலக முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. சீனாவில் மட்டுமே இந்த வைரசால் 3,158 பேர் பலியாகி உள்ளனர். உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 4011 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47 ஆக இருந்தது. இன்று 60 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.